கனவுகள் ஆயிரம் கதைகள் சொல்லும்
கவிதைகள் ஆயிரம் கனவுகளை சொல்லும்
கலங்கிய நீரோடை நினைவுகளுடன்
அம் மனை வீதி வழியே
நாட்கள் பல கழிந்து ..........
அமர்ந்து அலட்டிய சுவர்க்கரைகள்
ஆளில்லாமல் இன்று தனிமையிலே
எத்தனை நாட்களை கடந்திருப்போம்
அம்மாவின் திட்டுப் பேச்சுகளுடன் அதன்மீது
நாட்கள் ஆயிரம் கடந்து போனாலும்
நினைவுகள் காலவதியின்றி நெஞ்சோரத்தில்
குட்டிக் கதைகள் பேசிய
குட்டிச்சுவர் மீது அன்று
எழுதி வைத்த கிறுக்கல்கள் மட்டும்
இன்று ஏனோ பொக்கிஷங்களாய்
தொட்டுப் பார்க்கிறேன் மெல்ல......
வெளியே போகிறேன் என்றேன்
"ஏழு கழுதை வயசாய்ப் போச்சு
இன்னுமா போகிறாய் ஊர் மேய"
என் அம்மாவின் அதட்டல் குரல்
சமையலறை வாசல் வழியே
"உன் போன்ற பெடியங்கள் இன்று
ஆயிரமாயிரமாய் கை மேலே
உனக்கு மட்டும் இங்கே தண்டமாய்"
மேலும் ஒரு குரல் காதில் விழ
சட்டை செய்யாமல்
சட்டையை மாட்டிக் கொண்டு
வெளியே போன போது
"உன் வீட்டிலுமாடா இப்படி"
என்றான் ஒரு நண்பன்
நிம்மதியுடன் மனம்
அன்று சிறகடித்த நினைவுகள்
இன்று என் மனதின் ஓரம்
அனல் காற்றாய்
எத்தனை காலைகள்
எத்தனை மாலைகள்
கட்டாம் தரை சாலைகளிலும்
கடற்கரை ஓரங்களிலும்
காரணமின்றி ஒரே பாதை வழியே
தேய்ந்து போன பாதணிகள்
இன்றும் அந்த கதைகள் சொல்லும்
மீண்டும்
அம்மனை வீதி வழியே
நினைவுகளில் மூழ்கிய போது
"யாரப்பா அங்கே "
எங்கேயோ கேட்ட குரல்
கனவுகளை மீண்டும் நிஜமாக்க
ஒலி வழி நோக்கி புன்னகையுடன்
குட்டி சுவர் மறுபடியும்
எனை பார்த்து சிரிக்கிறது .............
இப்படிக்கு
அன்புடன்......... Prakhash
பெண்ணவள் குடையாய் இன்று
என் அருகில்....
நான் மணக் கோலத்தில் தேடிய
நான் மணக் கோலத்தில் தேடிய
பெண்ணவள் மனைவியாய் இன்று
எங்கோ தெருவில்.....
எத்தனை மாற்றங்கள்
எத்தனை மாற்றங்கள்
கண்டோம்
அத்தனையும் கண்முன்னே
அத்தனையும் கண்முன்னே
தூறல்களாய்
பட்டுப் பூச்சி வாழ்கையல்ல
எட்டு நாளில் பட்டுவிட
மழைநின்ற பின்னும் நிற்காத
பட்டுப் பூச்சி வாழ்கையல்ல
எட்டு நாளில் பட்டுவிட
மழைநின்ற பின்னும் நிற்காத
தூவானமாய்
அவள் மடிதனை தேடுகிறேன்
கிடைத்தது அந் நங்கை அல்ல
ஈற்றில் அவள் தங்கை
வாய்த்த வரையில் லாபம்
மீண்டும் தூவானம் தூறத் தொடங்கிற்று..................
அவள் மடிதனை தேடுகிறேன்
கிடைத்தது அந் நங்கை அல்ல
ஈற்றில் அவள் தங்கை
வாய்த்த வரையில் லாபம்
மீண்டும் தூவானம் தூறத் தொடங்கிற்று..................
மாசி மாத தென்றல் காற்று
மார்கழி குளிரோடு மார்பில் பட
பூ இதழ்களோடு காதல் உரைக்க
மொட்டை மாடி வாயிலிலே
காடாய் கிடந்த கடற்கரை நோக்கியபடி
காத்திருக்கிறேன்
அழகிய கடற்கரையில் ஆங்கங்கே
அழுக்காக்கி கொண்டிருக்கும் தெருநாய்கள்
நிசப்தமான வீதிகளில்
ஓசை இன்றி சில மனிதர்கள்
என்ன ஆயிற்று இன்று.....
காலையும் ஓடிக்கொண்டிருக்கிறது
கடற்கரையில் காதலர்களை காணோமே
"சுனாமி" என்று உரைத்த போதும்
தான் நிலம் மறக்கத் தவிர்த்தவர்கள்
இன்று மட்டும் இருப்பிடம் மறந்ததேன்
"அன்றொரு திங்களில்
இன்று போலொரு நாளில் தான்
என் நாடும் விடிந்ததாம்"
அங்கே ஒரு கிழவன் பிதற்றியபடி
கொஞ்சம் பெருமிதத்துடன்
வேறு வெட்டி வேலை இல்லை
அவனருகில் சென்றேன்
"இன்று தானடா தம்பி
புன்னகையுடன் அவன் முகம்
"அப்படியா தாத்தா
எவ்வளவு காசு கொடுத்தார்கள்
அதை வாங்குவதற்காக"
அறியாச் சிறுவனில்லை
ஆனபோதிலும் கேட்டு விட்டேன்
அவன் முகம் வெம்பியதையும்
காண நான் தவறவில்லை
இப்படி ஒரு நாளா
கண்ணுக்கு கூட ஒன்றும்
காதல் தரவில்லையே
கவலையுடன் திரும்புகிறேன்
வீதி ஓரத்தில் இன்னொருவன்
அவனும் பிதற்றுகிறான்..........
"உலகத்தில இத்தனை பொண்ணுங்க இருந்தும் நான் ஜெசிய மட்டும் ஏன் காதலிச்சன்"இது காதல் தூக்கிவாரிப் போட்ட பாதிப்பில் இருந்த ஒரு இளைஜன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சொன்னது... அவளைப் பார்க்காத வரைக்கும் அந்த வார்த்த ஏதோ எனக்கும் சாதரணமா தான் இருந்தது, காதல் என்பது கூட சில காலம் முன் வரை எனக்கு ஏதோ சாதாரண வார்த்தை தான், அனால் இன்று அதை கேட்டு ரசிக்கிற அளவுக்கு என் மனம் எப்பிடி மாறியது என்று எனக்கே தெரியவல்லை...
அன்றிரவு ஒரு நாள் எட்டு மணி இருக்கும் என் வீட்டு மொட்டை மாடியில் நான் என்றும் போல் இரவை ரசித்தபடி அமர்ந்திருந்தேன், வழமையாய் பிறைவடிவிலாவது தோன்றும் சந்திரன் வானத்திடை மறந்திருந்தான்.. அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை புதிதாய் ஒரு பௌர்ணமி என் மனத்திடை வரப்போகின்றது என்று....நேரம் செல்லச் செல்ல மழை மெல்லத் தூர ஆரம்பித்த வேளை யாரோ ஒருத்தி என் வீட்டு வாசலோரம் ஒதுங்கி வந்தாள், அவள் அழகிய புருவமும் மெல்லிடை நளினமும் என்னை கொஞ்சமாய் அவளிடத்தில் ஈர்த்தன ...பாதையில் நடந்து போகும் போது ஆயிரம் முட்கள் கிடக்கலாம் அனால் ஏதோ சில தான் எம் காலில் ஏறும் அதுபோல் தான் கடந்து போகும் ஆயிரம் பெண்களில் எவளோ ஒருத்திதான் எம்மைத் திருப்பிப் பார்க்கவும் வைப்பாள் முட்குத்திய வலியோ சோகமானது ஆனால் ஆனால் அவளைப்பார்த்த போது என்னில் உண்டான வலி அன்றெனக்கு சுகமாகத்தான் தெரிந்தது, ஒதுங்கி நின்ற அவள் என்னை மெதுவாய்த் திரும்பிப் பார்த்தால் அவளின் அழகிய நளினங்கள் என்னை அவளிடம் பேசத் தூண்டின, ஏதோ தைரியத்துடன் அவளிடம் பேச விளைந்தேன்.....
அவளிடம் என்னை அறிமுகம் செய்தேன் முதலில் மௌனம் சாதித்தாலும் பிறகு அவளும் தன் அறிமுகம் கூறினாள்,நான் குடியிருக்கும் வீதியில் கடைசி வீடுதான் அவள் வீடு என்றாள், நானும் ஆவலுடன் பேசியபடி என் குடையை எடுத்துக்கொண்டு அவளை அவள் வீட்டில் விடுவதற்காய் அவளுடன் சென்றேன், கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் அவள் என் கேள்விகளுக்கு பதில் தர தயங்கவில்லை...
மழைத்தூறல் மெதுவாய் நின்றுவிட்டது ஆனால் என் மனத்தூறல் அப்பொழுதுதான் அடைமழையாய்...அவளிடம் ஏதோ கூற வேண்டும் போல் இருந்தது." உங்களிடம் ஒன்று கூறலாமா தயக்கத்துடன் கேட்டேன் அவளும் தலை அசைத்தாள்," நான் உங்களை விரும்புவதாக கருதுகின்றேன் ஆனால் தெரியவில்லை அப்படித்தான் தோன்றுகிறது நான் அவ்வாறு கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன்.. அவளும் சற்று நேரம் மௌனமாய் நின்றுவிட்டுச் சென்றுவிட்டாள், நானும் செய்வதறியாது வீடு திரும்பிவிட்டேன்
இரண்டு வாரங்கள் கடந்தன அவ்விரண்டு வாரங்களும் அவள் கடந்து போகும் பாதை வழியே அவளுக்காய் காத்து நின்றிருப்பேன் அவள் தலைகுனிந்தபடி சென்றுவிட்டாள் மனம் களைத்தபடி ஏதோ மன வாட்டத்துடன் காத்திருந்த போது மீண்டும் ஒருநாள் அதே போல் ஒரு இரவு அதே போல் ஒரு மழை நாள் அவள் என் வீட்டருகில் ஒதுங்கினாள் ஆனால் இன்றோ கையில் குடையுடன்..என் மனம் ஏதோ பதில் கூறியது என்றாலும் அவள் வாயால் கேட்பதற்காய் அவளருகில் சென்றேன் அவள் என்னைப்பார்த்துப் புன்னகைத்தால் அவள் புன்னகை எனக்கு ஆயிரம் பதில்கள் உரைத்தது ....அவளும் என் மீது காதல் கொண்டுவிட்டாள்இரண்டு மாதங்கள் நன்றாக ஓடின அனால் அவள் தந்தையின் திடீர் இடமாற்றம் அவளையும் வேறோர் பிரதேசத்துக்கு இடம்பெயர வைத்தது, நான் கூட இதை அறிந்திருக்கவில்லை,அவளுக்கும் கடைசி நேரம் வரை இது தெரியாது போலும்... ஆறு மாதங்கள் அவளை எங்கெல்லாமோ தேடி அலைந்தேன் காணவில்லை, என் கவலையை கொஞ்சமாவது மறக்க நானும் இடமாற்றம் கேட்டுப்பெற்றுக்கொண்டு வேறிடம் சென்றேன், புதிதாய் வடிவமைக்கப்படும் ஒரு நவநாகரீக நகரத்தின் பொறியியல் வடிவமைப்பாளர்களுள் நானும் ஒருவன் பாதி நேரங்கள் தூக்கமின்றி வேலையுடன் கழிந்தது ஏங்கிய சில மாலை நேரங்களில் என் தனிமைக்கு கடற்கரைகளும் கட்டாந்தரைகளும் களம் அமைத்தன... அப்பிடித்தான் அன்று ஓர் நாள் கடற்கரையில் தனிமையில் காத்திருக்கையில் எங்கேயோ கேட்ட குரல் என்னைத் திரும்ப வைத்தது..
ஆம் அது அவளேதான் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக காணப்பட்டாள் ஆறுமாதங்கள் களிந்தல்லவா பார்க்கிறேன் அதுதான் வித்தியாசமாக தோன்றுகிறதோ...? அவளும் என்னைக்கண்டுவிட்டால்.. மெல்லத் தயங்கியபடி என் அருகில் வந்தாள் நலமாக இருக்கிறாயா அவளின் நாக்கு தடுமாறியது,என் கண்களும் ஏனோ அவள் முகம் விட்டு அகலவில்லை,"இத்தனை நாட்கள் எங்கே போயிருந்தாய் ஒரு தொலைபேசி கூட எடுக்காமல் கொஞ்சம் ஆவேசமாய்க் கேட்டேன், கோபமும் இருக்கும் "தனே ஆனால் அவளின் பதிலோ மௌனம் தான், எண்ணற்ற வார்த்தைகள் பேச வந்த என் வாய் ஒருநிமிடம் தடுமாறியது, அது அவளின் திருமணப்பத்திரிகை கண்டு ........... ஆறு மாதங்கள் அவளை தேடி அலைந்த போது நானடைந்த வேதனை இன்று ஒரே நொடியில் என்னுள்ளே.....
திருமணமா ? உனக்கா? மெதுவாய் கேட்டேன், தயவுசெய்து தவறாய் நினைக்க வேண்டாம் என் சூழ்நிலை அப்பிடி அவ்வளவு தான் அவளால் கூற முடிந்தது, எனக்கு வாயில் ஏதோ எல்லாம் திட்ட வேண்டும் போல் இருந்தது அப்படிஎன்றால் அன்றே ஒதுங்கியிருக்கலாம் தனே என்னைக் காதலித்தாள் பின் பிரிந்து சென்றாள் இப்பொழுது திருமணம் என்கிறாள்... எனக்கு என்னவெல்லாமோ கொட்டித் தீர்க்க வேண்டும் போல் இருந்தது ஆனால் வாய்மூடி இருந்துவிட்டேன். " நாளை காலை திருமணம்" பத்திரிக்கை தந்துவிட்டுச் சென்றுவிட்டாள்... ஆவலுடன் ஆடிய கண்ணாம்பூச்சி ஆட்டங்கள் இன்று கண்முன்னே விட்டில் பூச்சியின் சிறகொடிந்த உடல் போலே.....மறுநாள் காலை விடிந்தது நேரமும் ஒஓடிக்கொண்டு இருந்தது அவளின் திருமணத்துக்கு சென்று வாழ்த்துமளவுக்கு என் மனதில் தைரியமில்லை.. புதிய வீட்டு மொட்டைமாடியில் நாள் பூராகவும் அமர்ந்திருக்கிறேன்... வேலைக்குக் கூடப் போகாமல் ...நேரமும் ஓடியது காலை மதியம் மாலை என இரவும் kaainthவந்துவிட்டது...அதே போல் ஒரு இரவு நேரம் எட்டு மணியிருக்கும் ஆவலுடன் முதல் இரு சந்திப்புக்களையும் நினைவுபடுத்துவது போல மழைத்துளிகள்...காய்ந்தது கிடந்த என் இதயத்தை மெல்ல ஊடறுப்பது போல் , எத்தனை நாட்கள் அவளிற்காய் வெயிலிலும் மலையிலும் காத்திருந்திருப்பேன்...
காற்றில் மரங்கள் மெதுவாக அசைகின்றன.. என் வீட்டு வாசலோரம் யாரோ ஒரு பெண் மழைக்கை ஒதுங்குவது போல் ஒதுங்குகிறாள். கையில் குடையுடன்... ஆம் அது அவளேதான் வேகமாய் படிவழியே இறங்குகிறேன் வாசலை நோக்கி ஓடுகிறேன் இளைத்த பெருமூச்சை மெதுவாய் உல் அமிழ்த்திவிட்டு வீட்டின் வாசல்க்கதவைத் திறந்தேன்
அங்கே யாரையும் காணவில்லை யாவும் என் மனத்திடை வழியே தேங்கிக்கிடந்த வலிகளால் வெளிவந்த கனவுகள் போலும்... இந்நேரம் அவள் கணவனுடன் சங்கமித்திருப்பள்...கண்முன்னே கழிந்த,கலைந்துவிட்ட காலங்களும் கனவுகளும் மீண்டும் வரப்போவதில்லை ஆனால் மீண்டும் புதிதாய் ஒரு காலம் மலர்ந்து வரலாம் கனவுகள் துளிர்க்கலாம்... ஆனால் ஒன்று மீண்டும் என்னையே கேட்கிறேன்
"உலகத்தில இத்தனை பெண்கள் இருந்தும் நான் அவளை மட்டும் ஏன் காதலித்தேன் "
ப்ரியமுடன்
PRAKHASH........





