துடிக்குதே மனமே மனமே
உணகத்தின் சுகமே சுகமே
இங்கேதான் மூழ்கிக் கிடக்கிறதோ.......
கனவுகள் கைகள் கட்டி
கல்லூரி வாசல் தட்ட 
நினைவுகள் நிஜமாய் மலர்கிறதோ....

அந்தித் தென்றல் போலே 
இங்கே ஒரு சாரல்
நித்தம் நித்தம் வீசும் தோழா
நெஞ்சின் மழையாக..

கண்ணித்தென்றல் காற்று 
நம் கண்ணில் பட்டு போகும் 
கைகள் மெல்லப் பட்டால் அது 
காற்றில் ஓடிப்  போகும்...

கருப்பு நிலா பார்க்கிறதே ஓரமாய் ஓரமாய்
மனம் காதலாலே சிரிக்கிறதே மௌனமாய் மௌனமாய் 
கருப்பு நிலா பார்க்கிறதா உனை ஓரமாய் ஓரமாய்
மனம் காதலாலே சிரிக்கிறதா மௌனமாய் மௌனமாய் .....

                                                                    ( துடிக்குதே மனமே மனமே....)

அந்த நாள் இன்று போல் இருக்கின்றதே 
வாசல் நமக்காய் இங்கே திறக்கின்றதே 
கண்டநாள் கனவுகள் கவிதைகளாய் எமை 
இன்று தான் கைகோர்த்து அழைக்கின்றதே 

மனம் ஏதோ சொல்ல தவிக்க
அது காலம் தன்னை நினைக்க 
நெஞ்சம் கொஞ்சம் துடிக்குதே தோழனே.....

காதல் கூட கடக்கும்
வாலிபம் தான் பறக்கும் 
நெஞ்சம் என்றும் நினைக்குமே உன்னையே ....


அந்த நாள் கனவு போல் மலர வேண்டுமே
வேண்டி நான் கேட்கிறேன் இறைவா உன்னையே.......



                                                         ( துடிக்குதே மனமே மனமே....)


அன்று நான் சாலையில் உன்னைப்பார்த்தது 
நெஞ்சம்தான் காதலில் இன்று ஏங்குது - அன்பே 
அன்று நான் சாலையில் உன்னைப்பார்த்தது 
நெஞ்சம்தான் காதலில் இன்று ஏங்குது 

கடலில் ஒரு துளி 
நினைவில் ஒருதுளி
ஏனோ எந்தன் நெஞ்சில் வலி 
காதல் ஒரு வலி 
தேடல் ஒருவலி 
நீதானே எந்தன் காதல் தோழி  

காதலித்த நெஞ்சம் அடியன்பே 
காணவில்லை கொஞ்சம் அதுயிங்கே
சகியே நீதான் கண்டு கொண்டுசென்றயோ 

நீயில்லாத  உலகம் அது காற்றில்லாத நரகம் அடி
எந்தன் நெஞ்சில் தீயை மூட்டி குளிர் கைகின்றாய் அன்பே 
நான் விடும் மூச்சில் கொஞ்சம் நீ குளிர்கின்றாய் 

                                                                  ( கடலில் ஒரு துளி.......)

ஏதோ மனதிலே ராகம் வளருதே 
காதல் என்றுதான் நானும் சொல்லவா
ஏனோ என்நிழல் தேடல் கண்டது 
உந்தன் துணை தான் அதுவும் நோக்குதா.....

அடி மலரின் வாசனை அது மாறிப் போகலாம்
மனதின் நேசம்தான் அது மாறிப் போகுமா 
என்னிலே என்னிலே நீதான் பௌர்ணமி 
கெஞ்சினான் கேட்கிறேன் மெல்லத் தேயாதே..................

                                                                          ( கடலில் ஒரு துளி.......)


கண்ணோடு கண்ணோடு காதல்தான் கண்ணோடு 
 நெஞ்சோடு நெஞ்சோடு காயங்கள் நெஞ்சோடு
உன்னோடு உன்னோடு உயிர் போகுது உன்னோடு
மூச்சோடு மூச்சோடு அடி உந்தன் மூச்சோடு 

விழாமலே விழாமலே நான் விழுந்துவிட்டேனடி
தொடாமலே தொடாமலே நான் தொலைந்து விட்டேனடி

உன் ஒற்றை  புருவம் கொஞ்சம் அசையும் போது 
நான் என்னை மறந்தேனடி 
உன் ரெட்டை உதடு அது அழைக்கும் போது 
என் நெஞ்சம் தொலைத்தேனடி 

அன்று நான் மாலையில் உன்னை பார்த்தது -தோழி 
அன்றுதான் நெஞ்சினில் பூவே பூத்தது 

                                                                                      ( கண்ணோடு கண்ணோடு...............)

என்னுள்ளே வந்த ஜாபகம் ஏதோ சொல்லி எனை அழைக்க 
அந்நேரம் ஜன்னலோரத்தில் தனியாய் நின்று நான் சிரிக்க 
தேவதை என்னைத்தான் தாண்டிபோவளோ
வந்துதான் மெல்லமாய்  தீண்டிப்போவாளோ 

அசைந்தாடும் மெல்லிசை அதை உந்தன் சிரிப்பில் தேடுகிறேன் 
நீ கொஞ்சம் பேச மறந்தாள் நெஞ்சம் ஏனோ வாடுகின்றேன் 
இது தானா காதல், நெஞ்சில் இன்று தெரியவில்லை 
மௌனத்தின் தேடல் அர்த்தம் எனக்கு புரியவில்லை 

ஆனால் விழாமலே விழாமலே நான் விழுந்துவிட்டேனடி
உன்னை தொடாமலே தொடாமலே நான் தொலைந்து விட்டேனடி

பேசாமலே பேசாமலே சிதைத்துவிட்டயடி உயிரை 
கொல்லாமலே கொல்லாமலே கொன்றுவிட்டாயடி.... 

                                                                                  ( கண்ணோடு கண்ணோடு...........)



         இப்படிக்கு
ப்ரியமுடன் Prakhash

About this blog

Followers

Powered by Blogger.