Friday, November 18, 2011
வரம் கேட்டு ரதிகள் ஆயிரமாய்ப் போகிறார்கள்
தரைபார்த்து ராமர்களும் தெவிட்டாமல் போகிறார்கள்
இத்தனை மத்தியில் நானும் நுழைந்திட்டேன்
பல்கலை கனவுகள் பலமாய் உறவாட....
கனாக்காணும் காலங்களில் கனவுகள் வடித்தவன்
உலாப்போன வீதிகளில் அன்று கதைகளைத் தேடினேன்
ஓ.... இலங்கைப் பல்கலை போலும்
இப்படித்தான் உரு மாற்றங்களோ
இரண்டிரண்டாய் கோர்த்துவிட்டார்கள் - அடடா
என்னமா சேர்க்கிறார்கள் இங்கேயே
ஒற்றுமையைப் பலப்படுத்தும் வித்தை தெரிந்தவர்கள்
வாழை இல்லை மீது ஏதோ ஒன்று வெண்மையாய்
தமிழாக்கம் கேட்டேன் வெண்சோறு என்றார்கள்
ஓ... அதுதான் இதுவா
முன்னால் போன என் நண்பனுக்கு அழகாய் சிங்கள பெண்ணொருத்தி
ஜோடியாய் உணவருந்த... பொருமியது மனம்..
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது....
சற்று நேரம் கழிந்த பின்னே
அங்கே ஊர் பெரிய அரங்கம்
முன்வரிசையில் நாங்கள் சிலர்
பேசிய பாஷைகள் தாலாட்டாய் மாறவும்
தூங்காமல் அவதிப்பட்ட முதல் நாள்
ஈற்றிலே ஒரு குரல் என் மொழியிலும்- என்செய்ய
பாதியுறக்கத்தில் பார்த்திருக்க மறந்துவிட்டேன்
இரவுகள் கடந்தபின் ஒருநாள் மாலை
கைகள் காற்றாடியாக பழைய உடட்பயிர்ச்சி கூடத்திலே
"விழித்திரு" என்றுவிட்டு ஏனோ கழுத்தறுத்தார்கள்
இருதடவைகள் பரீட்சை துன்பம் இதற்காகவோ
ஈற்றிலே வந்த ஊலலல்லா கூட
முழுசாய் கேட்பதற்குள் முடங்கிவிட்டது
வகுப்பறை வாசகம் மட்டும் என்ன சொல்ல
ஆங்கில மாமிகள் அழகாய்ப் பேசுகிறார்கள்
அனுதினம் ரசிப்பதக்குத்தான் எனக்கு மனமில்லை
விருந்தினராய் இருந்திருந்து எட்டிப்பார்ப்பேன்
அடிக்கடி ஆசிரியை என்னைப் புதிதாய் பார்க்கிறாள்
கல்லூரிக் கடந்தவை கதைத்து முடித்துட்டேன்
சிரிப்பிலே சிலதருணம் சோகமும் கலந்துவரும்
ஆயிரம் சந்தர்ப்பங்கள் என் சகோதர நண்பனுக்காய்
மறுதலிக்க முடியாத உண்மைகள் அவை
போகட்டும் என்செய்ய.....
கல்லூரிக்கதை எழுதிய இக் கவிசரி
முற்றிலுமாய் என் தமிழ் பேசட்டும் ......
0 comments:
Post a Comment