கண்ணோடு கண்ணோடு காதல்தான் கண்ணோடு
நெஞ்சோடு நெஞ்சோடு காயங்கள் நெஞ்சோடு
உன்னோடு உன்னோடு உயிர் போகுது உன்னோடு
மூச்சோடு மூச்சோடு அடி உந்தன் மூச்சோடு
விழாமலே விழாமலே நான் விழுந்துவிட்டேனடி
தொடாமலே தொடாமலே நான் தொலைந்து விட்டேனடி
உன் ஒற்றை புருவம் கொஞ்சம் அசையும் போது
நான் என்னை மறந்தேனடி
உன் ரெட்டை உதடு அது அழைக்கும் போது
என் நெஞ்சம் தொலைத்தேனடி
அன்று நான் மாலையில் உன்னை பார்த்தது -தோழி
அன்றுதான் நெஞ்சினில் பூவே பூத்தது
( கண்ணோடு கண்ணோடு...............)
என்னுள்ளே வந்த ஜாபகம் ஏதோ சொல்லி எனை அழைக்க
அந்நேரம் ஜன்னலோரத்தில் தனியாய் நின்று நான் சிரிக்க
தேவதை என்னைத்தான் தாண்டிபோவளோ
வந்துதான் மெல்லமாய் தீண்டிப்போவாளோ
அசைந்தாடும் மெல்லிசை அதை உந்தன் சிரிப்பில் தேடுகிறேன்
நீ கொஞ்சம் பேச மறந்தாள் நெஞ்சம் ஏனோ வாடுகின்றேன்
இது தானா காதல், நெஞ்சில் இன்று தெரியவில்லை
மௌனத்தின் தேடல் அர்த்தம் எனக்கு புரியவில்லை
ஆனால் விழாமலே விழாமலே நான் விழுந்துவிட்டேனடி
உன்னை தொடாமலே தொடாமலே நான் தொலைந்து விட்டேனடி
பேசாமலே பேசாமலே சிதைத்துவிட்டயடி உயிரை
கொல்லாமலே கொல்லாமலே கொன்றுவிட்டாயடி....
( கண்ணோடு கண்ணோடு...........)
இப்படிக்கு
ப்ரியமுடன் Prakhash

0 comments:
Post a Comment