உணகத்தின் சுகமே சுகமே
இங்கேதான் மூழ்கிக் கிடக்கிறதோ.......
கனவுகள் கைகள் கட்டி
கல்லூரி வாசல் தட்ட
நினைவுகள் நிஜமாய் மலர்கிறதோ....
அந்தித் தென்றல் போலே
இங்கே ஒரு சாரல்
நித்தம் நித்தம் வீசும் தோழா
நெஞ்சின் மழையாக..
கண்ணித்தென்றல் காற்று
நம் கண்ணில் பட்டு போகும்
கைகள் மெல்லப் பட்டால் அது
காற்றில் ஓடிப் போகும்...
கருப்பு நிலா பார்க்கிறதே ஓரமாய் ஓரமாய்
மனம் காதலாலே சிரிக்கிறதே மௌனமாய் மௌனமாய்
கருப்பு நிலா பார்க்கிறதா உனை ஓரமாய் ஓரமாய்
மனம் காதலாலே சிரிக்கிறதா மௌனமாய் மௌனமாய் .....
( துடிக்குதே மனமே மனமே....)
அந்த நாள் இன்று போல் இருக்கின்றதே
வாசல் நமக்காய் இங்கே திறக்கின்றதே
கண்டநாள் கனவுகள் கவிதைகளாய் எமை
மனம் ஏதோ சொல்ல தவிக்க
அது காலம் தன்னை நினைக்க
நெஞ்சம் கொஞ்சம் துடிக்குதே தோழனே.....
காதல் கூட கடக்கும்
வாலிபம் தான் பறக்கும்
நெஞ்சம் என்றும் நினைக்குமே உன்னையே ....
அந்த நாள் கனவு போல் மலர வேண்டுமே
வேண்டி நான் கேட்கிறேன் இறைவா உன்னையே.......
( துடிக்குதே மனமே மனமே....)


0 comments:
Post a Comment